தமிழ்நாடு

ஆணையத்தில் ஆஜராகாதது குறித்து ஓபிஎஸ் விளக்கம்!

Published

on

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஓபிஎஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலரும் இது குறித்து விமர்சிக்கின்றனர்.

ஓபிஎஸ் விசாரணை ஆணையத்தில் ஆஜரானால் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்பு தயாராக உள்ளது. மேலும் இதற்கு முன்னர் விசாரணை ஆணையத்தில் ஆஜரானவர்கள் அளித்த சாட்சியங்களும் ஓபிஎஸுக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் ஆஜராகும் பட்சத்தில் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படும் எனவும், அது ஒபிஎஸுக்கு எதிராகவும் அமையும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு பயந்து தான் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்யிடம் ஆணையத்தில் ஆஜராகமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், ஜனவரி 23-ம் தேதி ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருந்ததால், விசாரணை ஆணையம் குறிப்பிடும் மறு தேதியில் ஆஜராகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்கு பிறகு சில முறை விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. எப்போது சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தாலும், அங்கு சென்று உண்மை நிலையை விரிவாகப் பேசுவேன் என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version