தமிழ்நாடு

முதல்வராக வேண்டும் என்ற ஈனத்தனமான வேலை எனக்கு இல்லை: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

Published

on

தங்க தமிழ்செல்வன் கொழுத்தி போட்ட ஒரு சம்பவம் தமிழக அரசியலில் அனலாய் எரிந்துகொண்டிருக்கிறது. தினகரனை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தான் தற்போது ரெட் அலர்ட்டாக அதிமுகவில் வலம் வருகிறது. இதனை மேலும் வீரியமாக்கும் விதமாக அமைந்தது தினகரனின் செய்தியாளர் சந்திப்பும். ஓபிஎஸ் என்னை சந்தித்தது உண்மை தான் அதனை அவரே மறுக்க மாட்டார் என்றார் தினகரன். இப்படி எரியிர நெருப்பில் தினகரனை எண்ணெயை ஊற்ற விவகாரம் சூடுபிடித்தது. இதனையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் தினகரன் உடனான சந்திப்பு குறித்து விள்ளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மனம்விட்டு பேசவேண்டும் என பொதுவான நண்பர் ஒருவர் மூலம் தினகரன் அழைத்ததால் அந்த வீட்டில் தினகரனும் நானும் சந்தித்தோம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அண்ணனை ஆட்சியை விட்டு இறக்கிவிட்டு தான் முதல்வர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தான் பேசினார் தினகரன். அதில் எனக்கு விருப்பம் இல்லாததால் நான் வந்துவிட்டேன். நானும் தினகரனும் சந்தித்தது 2017-இல் ஜூலை 12-ம் தேதி. எடப்பாடி அண்ணனுடன் நான் இணைந்தது செப்டம்பர் 21-ம் தேதி. இதுதான் உண்மை என்றார் ஓபிஎஸ்.

மேலும், இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசை கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டும் என்ற ஈனத்தனமான வேலை எனக்கு இல்லை. ஆட்சிக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் செயல்படுகிறார் தினகரன். எனக்கும் தினகரனுக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றார் ஓபிஎஸ்.

seithichurul

Trending

Exit mobile version