தமிழ்நாடு
டிடிவி தினகரன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் சகோதரர்: அதிமுகவினர் அதிர்ச்சி!
டிடிவி தினகரனின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அவரது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டு இருப்பது பெரும் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் சசிகலா இணைய வேண்டும் என கடந்த பல மாதங்களாக முயற்சித்து வருகிறார் என்பதும், அவ்வாறு அவர் இணைந்துவிட்டால் அதிமுக அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதனை எதிர்த்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என ஓபிஎஸ் கூறினார். இந்த கருத்துக்கு வரவேற்பு அளித்த டிடிவி தினகரன் அவர்கள் ஓபிஎஸ் எப்போதும் நியாயத்தை மட்டுமே பேசுவார் என்றும் அவர் மனதில் பதிய பேசுவார் என்றும் கூறியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற டிடிவி தினகரன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் சகோதரர் கலந்து கொண்டிருப்பது ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவரின் நெருக்கத்தை காட்டுவதாக அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மறைந்தவுடன் ஒபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது அவரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கியது சசிகலாவாக இருந்தாலும் தற்போது சசிகலாவுடன் ஓபிஎஸ் நெருக்கம் காட்டுவது ஈபிஎஸ் கோஷ்டியை கட்டுப்படுத்துவதற்கு அது ஒன்றே வழி என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் நெருக்கம் ஆகி வருவது அதிமுகவின் எதிர்காலத்தை என்னவாக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.