தமிழ்நாடு

ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்; சசிகலா காரணமா?

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரவேண்டும் என்றும் அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா சந்தித்தார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுவதாகவும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஓ ராஜா நீக்கப்படுகிறார் என அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் கூறபட்டுள்ளது.

ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையில் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ ராஜா நீக்கப்படுவதாகவும் கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version