தமிழ்நாடு

ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிடும் தங்கத்தமிழ் செல்வன்: தெறிக்க போகும் போடி தொகுதி!

Published

on

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்போது திமுகவின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

அப்போது அவர் போடி தொகுதியில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரனின் அமமுகவில் இணைந்தார் என்பதும் அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் போடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதி முக்கியத்துவம் பெற்ற தொகுதியாக மாறியுள்ளது.

போடி தொகுதியில் ஓபிஎஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடையே கடுமையாக போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த தொகுதி தெறிக்க வைக்கும் தொகுதியாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version