தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் சொத்துமதிப்பு எத்தனை கோடிகள்?

Published

on

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுடைய சொத்து மதிப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியின்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்களின் சொத்து மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு 3.14 கோடி சொத்து மதிப்பு இருந்தது ஆனால் தற்போது அவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சொத்து மதிப்பு குறைந்து விட்டதாகவும் தற்போது அவருக்கு அவருடைய சொத்து மதிப்பு 2.1 கோடியாக உள்ளது என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு 33 லட்சம் கடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது அவருக்கு 29 லட்சம் மட்டுமே கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாய் சொத்து இருந்த நிலையில் தற்போது அவருக்கு 7.83 கோடியாக உயர்ந்துள்ளதாக வேட்புமனுவில் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version