தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அதிமுக பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டது என்பதும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி போட்டியிடும் தொகுதிக்கு விருப்பமனு விண்ணப்பித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுகவின் பிரபலங்களான ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ் போடிநாயக்கனூரிலும் அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், அமைச்சர் தங்கமணி குமாரபாளையத்திலும், அமைச்சர் வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். மற்ற அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை ஏற்கனவே போட்டியிட்ட 70% பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் 30 சதவீத புதுமுகம் வேட்பாளர்கள் அதிமுகவில் அறிமுகப்படுத்தபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது

author avatar
seithichurul

Trending

Exit mobile version