இந்தியா

எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Published

on

எதிர்கட்சிகளின் அமளியிலால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமான மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியன ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று முதல் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரான இன்று பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கும் பல்வேறு பிரச்னைகளை தொடர்பாகப் பேச நேரம் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.

நாடாளுமன்றம் வெளியே பேசிய மோடி

ஆனால், மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய பின்னர் எதிர்கட்சியினர்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கேள்வி எழுப்பத் தொடங்கினார். இதனால் இரு அவைகளிலுமே கூச்சல், குழப்பம் அதிகமாகியது. முதலில் 40 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாகக் கூறிய சபாநாயகர் 2 மணி முதல் கூட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார். ஆனால், மீண்டும் கட்டுங்கடங்காத கூச்சல் குழப்பத்தினால் அவை மீண்டும் மீண்டும் ஒத்துவைக்கப்படுகிறது.

மாநிலங்களவை சபைத் தலைவர் பியூஷ் கோயல் கூறுகையில், “முதல் நாள் முதல் கூட்டத் தொடரிலேயே எம்.பி-க்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. சபையின் தலைவர் பேசும் போது கூட குறிக்கீடு எழுப்பப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version