தமிழ்நாடு

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு: போஸ்டரால் பரபரப்பு!

Published

on

அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே நிலவி வரும் உச்சக்கட்ட மோதல் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் திமுகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தங்க தமிழ்செல்வனோ அதிமுகவுக்கு தான் ஓகே சொன்னதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதிமுகவில் தங்க தமிழ்செல்வனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாக தீயாக பரவியது ஒரு தகவல்.

இதனையடுத்து தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைக்க கூடாது என்ற போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், கட்சிக்கு துரோகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இணைக்காதே, ஆட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தவரை இணைக்காதே, அவரை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதிமுகவின் விசுவாசிகள் என்று குறிப்பிட்டு சிலர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version