உலகம்

மஜத – காங்கிரஸ் பிரச்சனையின் பின்னணியில் பாஜக.. கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா!

Published

on

பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி இடையே நடந்து வரும் பிரச்சனைக்கு பாஜகதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.

கடந்த 8 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது. அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாஜகவால் அப்போது ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கர்நாடக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர், கர்நாடகாவில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராக வந்தால் மீண்டும் கர்நாடக உண்மையான வளர்ச்சியை பார்க்கும். அதேபோல் காங்கிரஸ் எம்எல்ஏ சி புத்ரங்காச்செட்டி ”சித்தராமையாதான் இப்போதும் எங்கள் முதல்வர்” என்று கூறினார்.

Trending

Exit mobile version