தமிழ்நாடு

மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் ஆலை: பரபரப்பு தகவல்

Published

on

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தி இருப்பதால் மீண்டும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பம் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூலம் மாசு ஏற்படவில்லை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை கிளப்பிய தீய அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version