தமிழ்நாடு

ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த ரெய்டு: கிடைத்த தொகை எவ்வளவு?

Published

on

நேற்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கிடைத்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று திடீரென திமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீடு, ஒருசில திமுக வேட்பாளர்களின் வீடு என வருமான வரித்துறையினர் வளைத்து வளைத்து சோதனை செய்தனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மகள் செந்தாமரை வீட்டில் நேற்று சுமார் 12 மணி நேரம் வருமானவரித் துறையினர் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்குக் கிடைத்தது வெறும் ஒரு லட்சத்தி 36 ரூபாய் மட்டுமே என்றும் அந்த பணத்தையும் அவர்கள் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஒப்படைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த ரசீது புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை செய்த அதிகாரிகள் வெறும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் மட்டுமே வீட்டுச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை மட்டுமே கண்டுபிடித்து உள்ளனர் என்பதும் வேறு எந்த விதமான பணம் மற்றும் நகைகள் முறைகேடாக இல்லை என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் திமுக வேட்பாளர்களின் வீடுகளில் செய்த சோதனையின் விபரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version