தமிழ்நாடு

ஐந்து ரூபாய்க்கு உணவு: 25 ஆண்டுகளாக அசத்தும் பெரியவர்!

Published

on

சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் பெரியவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபி ராமசாமி அய்யர் சாலையில் லக்ஷ்மி டீ ஸ்டால் என்ற கடை வைத்திருக்கும் பெரியவர் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய்க்கு உணவுகளை வழங்கி வருகிறார்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாத,ம் புளி சாதம் ஆகிய வகைவகையான உணவுகளை அவர் வெறும் ஐந்து ரூபாய்க்கு வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ஆம் ஆண்டு எம் கணேசன் என்பவர் இந்த உணவகத்தை ஆரம்பித்தார். இந்த உணவகம் முழுக்க முழுக்க ஏழை எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகவும் லாப நோக்கத்துடன் ஆரம்பித்தது இல்லை என்றும் அவர் ஆரம்பித்தபோதே கூறியுள்ளார்.

அதேபோல் அன்று முதல் இன்று வரை வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே உணவுப் பொருள்களை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விலைவாசி ஏறி விட்ட போதிலும் அவர் உணவுப் பொருளின் விலையை உயர்த்தவில்லை. அரசு நடத்தி வரும் அம்மா உணவகத்திலேயே 5 ரூபாய்க்கு உணவு விற்பனையாகி வரும் நிலையில் தரமான உணவு வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதை அடுத்து ஏழை எளிய மக்கள் அவரிடம் உணவுகளை கடந்த 25 ஆண்டுகளாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

தினசரி அவர் சுமார் 800 பாக்கெட்டுகளை பார்சல் மூலம் உணவுப் பொருட்களை விற்று வருவதாகவும் ஒரு சில மணி நேரத்தில் அவரிடம் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் விற்று விடும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து உணவு பொருட்களை விற்று முடித்தவுடன் மன நிம்மதியுடன் தான் வீட்டுக்கு செல்வதாகவும் லாபம் என்பது தனது குறிக்கோள் அல்ல என்றும் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version