தமிழ்நாடு

அண்ணாமலை மட்டும் தான் இந்த நாட்டிற்காக பிறந்தவர்… அதிமுக விமர்சனம்!

Published

on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் ஊழல் மற்றும் சொத்துப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தமிழகத்தில் ஆட்சி செய்த மற்ற கட்சியினரின் ஊழல் பட்டியலும் அடுத்தடுத்து வெளியாகும் என தெரிவித்திருந்தார். இது கூட்டணி கட்சியான அதிமுகவையும் சீண்டும் விதமாக அமைந்ததால் அதிமுகவினர் இதற்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்துள்ளனர்.

#image_title

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பாஜகவின் தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை என்ற நபர் வெளியிட்டாரா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

பாஜக சார்பாக அவர் வெளியிட்டிருந்தால் அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தைத் தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, ஒரிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அம்மாநில பாஜகவின் தலைவர் இதுபோன்று அம்மாநில தலைவர் மீது ஊழல் பட்டியல் வெளியிட இருக்கிறார்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என்றார்.

மேலும் ஜூன் மாதத்தில் அண்ணாமலை பயணம் மேற்கொள்வதாக சொல்லியுள்ளார். ஏதோ அண்ணாமலை மட்டும் தான் இந்த நாட்டிற்காக பிறந்தவர் போல் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டிற்காக அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உழைத்தவர்கள் தியாகம் செய்தவர்கள் பல லட்சம் பேர் உள்ளார்கள் என்றார் கே.பி.முனுசாமி.

seithichurul

Trending

Exit mobile version