உலகம்

பெட்ரோல் விலை வெறும் 93 காசுகள் தான்: எந்த நாட்டில் தெரியுமா?

Published

on

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்கியிருக்கும் நிலையில் ஒரு நாட்டில் வெறும் 93 காசுகள் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது உண்மைதான்.

உலகிலேயே கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. இந்த நாட்டில் இந்திய மதிப்பில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை வெறும் 93 காசுகள். இந்நாட்டில் ஏழில் ஒருவர் கார் வைத்துள்ளனர்.

கடந்த 1976 ஆம் ஆண்டில் வெளிநாட்டு செல்வாக்கை தடுக்கும் வகையில் வெனிசுலாவில் கச்சா எண்ணெய் தொழில் தேசிய மயமாக்கப் பட்டதால் அங்கு பெட்ரோல் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெனிசுலாவை அடுத்து லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.48 ரூபாய்க்கும் ஈரானில் 3.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மலேசியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் விற்பனையாகும் பெட்ரோல் விலை ரூ.50க்கும் குறைவு தான். இந்தியாவிலும் பெட்ரோல் விலை குறைவு தான் என்றாலும் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பால் தான் 110 ரூபாய்க்கு பெட்ரோல் விலை ஏறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version