சினிமா செய்திகள்

இந்த வார ரேஸில் 3 படங்கள் மட்டும் தான் போட்டி!

Published

on

மே 16ம் தேதி விஜய்சேதுபதியின் சிந்துபாத் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பல காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. அதே போல மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் எனை நோக்கிப்பாயும் தோட்டா படமும் இந்த வாரம் ரிலீஸ் கிடையாது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17ம் தேதி அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்கு போட்டியாக எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் கவின் – ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள நட்புனா என்னானு தெரியுமா ரிலீஸ் ஆகின்றன.

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் வெளியாகும் மிஸ்டர் லோக்கல் படத்திற்குத் தான் பயங்கர எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த வாரம் மே 9ம் தேதி 100 படமும் மே 10ம் தேதி அயோக்யா மற்றும் கீ படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் பஞ்சாயத்துகள் கிளம்பி ரிலீஸ் தேதி தள்ளிப்போயின. இதனால், படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை இந்த வார ரிலீஸ் படங்களுக்கு ஏற்படுமா என்பது கடைசி நிமிடத்தில் தான் தெரியும் என்ற நிலையில் தமிழ் சினிமா இயங்கி வருவது வேதனைக்குரிய விஷயம்.

seithichurul

Trending

Exit mobile version