தமிழ்நாடு

20% ஆம்னி பேருந்துகளே இயக்கம்: அதிலும் கூட்டமில்லாததால் நிறுத்தப்படும் அபாயம்!

Published

on

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 20% மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த பேருந்துகளும் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளுடன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இரவில் இயக்கப்படும் பேருந்துகள் அளவுக்கு பகலில் கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இன்று சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து 700 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்றும் ஆனால் இன்று 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு இருப்பதாகவும் அதிலும் போதுமான அளவு பயணிகள் இல்லை என்றும் ஆம்னி பேருந்துகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் ஆம்னி பேருந்துகளை நிறுத்தவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தாலும் ரயில்கள் வழக்கம் போல் இரவு நேரங்களிலும் இயங்குவதால் பெரும்பாலான பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version