இந்தியா

ஆன்லைன் ரம்மி விளையாட்டல் தொடரும் தற்கொலைகள்: சிக்கலில் விராட் கோலி, தமன்னா..!

Published

on

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான வழக்கு ஒன்றின் கீழ் விராட் கோலி, தமன்னா ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கின் கீழ் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுபவர்கள் பலர் உழைத்து சம்பாதித்த பணம் மொத்தையும் இழப்பதோடு சிலர் உயிரையும் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் விளையாட்டை நோக்கி மக்களைக் கவர்கின்றனர் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் விராட் கோலி, தமன்னா, அஜு வர்கீஸ் ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கூட திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 21 லட்ச ரூபாயை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

seithichurul

Trending

Exit mobile version