இந்தியா

போன் மூலம் நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆலோசனை.. மத்திய அரசின் இ-சஞ்சீவினி திட்டம்!

Published

on

கொரோனா ஊரடங்கால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே கடந்த மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளானார்கள்.

எனவே மத்திய அரசு இணையதளம் மூலம், மருத்துவர்களை அணுகி, இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துச்சீட்டுகளை போன் மூலம் பெறும் ‘E-Sanjivani’ என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் கிழ் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மருத்துவர்களை அணுக தங்களது உடல் நலக் குறைவுக்கான தீர்வுகளைப் பெறலாம்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் www.esanjeevaniopd.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அழைக்கவும் (Call Now) என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் மருத்துவர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு பேச முடியும்.

உடல் நலம் குறித்து நோயாளிகளிடம் போன் மூலம் கேட்டு அறியும் மருத்துவர்கள், ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல் மருந்து பரிந்துரை சீட்டுக்களையும் போனுக்கே அனுப்பிவிடுவார்கள். அதை மருந்தங்களில் கொடுத்து மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ‘சஞ்சிவனி’ திட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version