இந்தியா

திருப்பதி கோயில் தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சுற்றுலா தலங்களும் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன என்பதும் அங்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் படிப்படியாக கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதியில் அடுத்த மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக இம்மாதம் 20ம் தேதியில் இருந்து ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஜூலை 20ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய அடுத்த மாத தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் இலவச தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version