தமிழ்நாடு

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதை அடுத்து தமிழகத்திலும் விரைவில் பள்ளி திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே ஆசிரியர்கள் சங்கம், தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பலரும் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து உயர் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version