இந்தியா

இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.. செம போட்டியா இருக்கும்போல..!

Published

on

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் உலகில் அதிக ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்பதும் தெரிந்ததே. எனவேதான் அனைத்து நிறுவனங்களும் இந்திய மக்களின் விருப்பம் அறிந்து புது புது மாடல்களை தயாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணி இடத்தில் இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது மேலும் சில தயாரிப்புகளை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தற்போது டேப்லெட், மானிட்டர் மற்றும் ஸ்மார்ட் டிவிகளும் இந்திய சந்தையில் மிக அதிகமாக விற்பனையாவது அறிந்த ஒன்பிளஸ் அது போன்ற தயாரிப்புகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறது.

OnePlus இந்தியாவில் பிப்ரவரி 7 அன்று சில தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 11 5G, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் கீபோர்டு, ஒன்பிளஸ் Buds Pro 2, மற்றும் ஒன்பிளஸ் Q2 Pro ஆகியவற்றின் வரிசையில் அடுத்ததாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி இணைவதாகத் தெரிகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி புதிய ஒன்பிளஸ் டேப்லெட், ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் பேட் இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்த விவரக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு சியோமி, ரியல் மி, மோட்டோரோலா, நோக்கியா மற்றும் ஒப்போ ஆகியவை இந்தியாவின் டேப்லெட் சந்தையில் நுழைந்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது ஒன்பிளஸ் களமிறங்குவதால் செம போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version