இந்தியா

ஒன்ப்ளஸ் நார்டு2 செல்போன் வெடித்தது உண்மையா? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published

on

சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போன் திடீரென வெடித்ததாக வெளிவந்த தகவல் பொய்யானது என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

பெங்களூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போனை வாங்கி கொடுத்ததாகவும் அந்த போனை அவர் தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் ஒன் பிளஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டதாகவும் இதுகுறித்து ஒன் பிளஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் தொடர்பு கொண்டு விசாரணை செய்ய உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஒன்ப்ளஸ் நார்டு2 வெடித்ததாக கூறப்பட்ட புகாரை அந்நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. அது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் நார்டு2 செல்போன் வெடித்ததாக கூறிய நபரிடம் செல்போனில் பேசியதாகவும் அதிலிருந்து அவரது செல்போன் வெடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என கண்டுபிடித்து உள்ளதாகவும் கூறியுள்ளது

ஏற்கனவே இதே போல் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தனது தந்தைக்கு வாங்கிக்கொடுத்த ஒன்ப்ளஸ் நார்டு2 செல்போன் விடுத்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்றும், அதுவும் பொய்யானது என்றும் ஒன் பிளஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒன் பிளஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்பியிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது

seithichurul

Trending

Exit mobile version