தொழில்நுட்பம்

இந்தியாவில் வெளியாகிறது ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்: விலை என்ன? என்னென அம்சங்கள்

Published

on

மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மார்ச் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு இந்தியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

6.7 இன்ச் க்யூஎச்டி+ எல்டிபிஓ டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்

12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரி

48-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்789 சென்சார் + 50-மெகாபிக்சல் சாம்சங் ஐசோசெல் ஜெஎன்1 சென்சார் + 8-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கேமிரா

32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

ஆக்சிஜன் ஓஎஸ்

இந்தியாவில் ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.64,999 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version