தமிழ்நாடு

இரணியல் ஒத்த ஓட்டு வேட்பாளர் திமுக இல்லையா? ஆதாரத்தை அளித்த பாஜக!

Published

on

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஒருசில பாஜக வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்றும் ஒரு சில வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டும் பெற்று வந்ததாகவும் இணையதளங்களில் வைரலானது.

அதேபோல் திமுகவைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு பெற்று இருந்தார் என்று பாஜக தரப்பினர் பதிலடியாக வைரலாக்கினர். இந்த நிலையில் இரணியல் பேரூராட்சிகள் 4வது வார்டில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு பெற்ற முருகன் என்ற வேட்பாளர் திமுக வேட்பாளர் இல்லை என்றும் அந்த பேரூராட்சியில் 4, 5, 6 என மூன்று வார்டிலும் காங்கிரஸ்தான் போட்டியிட்டது என்றும் எனவே பாஜக தனது தோல்வியை மறைக்க வழக்கம்போல் கிளப்பிவிட்ட பொய் தான் என்றும் திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டது. மேலும் இதற்கான ஆதாரத்தையும் புகைப்படமாக வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்தவர்கள் தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகார பூர்வ இணைய தளத்தில் சென்று அந்த தொகுதியில் போட்டியிட்டவர்களின் விபரங்களை டவுன்லோட் செய்து வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் முருகன் என்ற வேட்பாளர் எந்த கட்சியின் சார்பாக போட்டியிட்டார் என்ற பகுதியில் திமுக என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தின்படி முருகன் என்ற வேட்பாளர் திமுக சார்பில் தான் போட்டியிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version