தமிழ்நாடு

பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும் தக்காளி: ஒரு பழம் ரூ.9!

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் ஒரு தக்காளி ரூபாய் ஒன்பது என பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது என்பதும் ஆனால் தற்போது கிலோ 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக தக்காளி பயிர்கள் நாசம் ஆனthai அடுத்து தக்காளி வரத்து மார்க்கெட்டுக்கு குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தக்காளி விலை விண்ணை முட்டியதாகவும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் கேரளாவில் இருந்து வரும் தக்காளி முற்றிலும் குறைந்து விட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 25% மட்டுமே தக்காளி மார்க்கெட்டுக்கு வருவதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக விலைக்கு தக்காளியை ஏலம் எடுத்து வருவதாகவும் இதனால் சில்லரை விலை ரூபாய் 110 முதல் 150 வரை விற்பனையாகி வந்தது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கழிவு தக்காளி கூட ரூபாய் 60 முதல் 80 வரை விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியில் தக்காளியை பாலித்தீன் கவரில் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இரண்டு 2 தக்காளி கொண்ட பாக்கெட் ரூபாய் 18 விற்பனையாகி வருவதாகவும், இதனால் ஒரு தக்காளி ஒன்பது ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிலோ 15 ரூபாய் என விற்பனையான காலம் போய் தற்போது ஒரு தக்காளி ஒன்பது ரூபாய் என விற்பனை செய்யப்படுவதை பார்த்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version