இந்தியா

1-10 வயது குழந்தைகளுக்கு கொரோனா: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Published

on

கொரோனா 3வது அலையில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல லட்சக்கணக்கான உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், கோடிக்கணக்கான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் அலை முடிவடைந்து இரண்டாவது அலை தற்போது இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் தாக்கி வருகிறது. மேலும் அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மூன்றாவது அலையும் தாக்க தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்றும் அதனால் குழந்தைகளை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் மூன்றாவது அலை தாக்குவதற்கு முன்னரே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது மருத்துவ நிபுணர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு மூன்றாவது அலையில் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்

கொரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் குழந்தைகளை தேவையில்லாமல் வெளியே நடமாட விட வேண்டாம் என்றும் மூன்றாவது அலை முடிவுக்கு வரும்வரை குழந்தைகளை பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Trending

Exit mobile version