தமிழ்நாடு

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி ஆல்பாஸா?

Published

on

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் அதேபோல் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த போது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நலத் திட்ட அறிவிப்புகள் தான் வெளியிடக்கூடாது என்றும் இது அரசு சார்ந்த முடிவு என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

seithichurul

Trending

Exit mobile version