தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், அவர்களும் இருக்கும் ஊரிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

அதாவது, தமிழகத்தில் இருக்கும் ஒருவர் வேறு மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கேயே தங்கியிருந்தால், தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குச் சோதனை செய்து பார்த்ததில் வெற்றி பெற்றதன் மூலம், ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா பதிப்பால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version