தமிழ்நாடு

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: சாதித்து காட்டிய தமிழக போலீசார்!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொள்ளை கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடித்த கும்பலின் தலைவன் சவுகத் அலி என்பவன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளான். ஏற்கனவே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருந்த ஹரியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர சிங், நசீர், ஆகியோர் கைதான நிலையில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட கும்பல் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, புதுவை ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டிய நிலையில் நான்கு மாநில போலீசாரிடம் சிக்காத கொள்ளையர்கள் தமிழக போலீசார்களிடம் ஒரு சில நாட்களிலேயே சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நான்கு மாநில போலீசாரால் செய்ய முடியாததை தமிழ்நாடு போலீஸ் சாதனை செய்து உள்ளதை அடுத்து தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த நிலையில் கைதான கொள்ளை கும்பல் தலைவனை இன்று போலீசார் சென்னை அழைத்து வரவிருப்பதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவிருப்பதாகவும்என்று செய்திகள் வெளியாகி உள்ளது. கைதான கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் விசாரணை செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version