இந்தியா

மம்தா பானர்ஜியின் இன்னொரு விக்கெட் காலி: மாநிலங்களவை எம்பி ராஜினாமா!

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு ஒரே சவாலாக இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என 11 பேர் வெளியே வந்து பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஒரு விக்கெட் காலியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி தினேஷ் திரிவேதி என்பவர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார். இவர் இன்னும் ஓரிரு நாளில் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை நிலவுவதாக கூறி தான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக தினேஷ் திரிவேதி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் திரிணாமுல் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து கொண்டிருப்பது மம்தாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version