தமிழ்நாடு

தீபாவளிக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!

Published

on

தீபாவளி பண்டிகை நாளை அதாவது நவம்பர் 4ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி நவம்பர் 4ஆம் தேதி வருவதை அடுத்து வெளியூர் செல்லும் அரசு ஊழியர்களின் வசதியை கணக்கில் கொண்டு நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நவம்பர் 4, நவம்பர் 5, நவம்பர் 6 மற்றும் நவம்பர் 7 என நான்கு நாட்கள் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து சனிக்கிழமை பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 4, 5 விடுமுறை நாள் என்ற நிலையில் நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது.

இந்த கேள்விக்கு தற்போது விடை அளிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுப்படி நவம்பர் ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு அலுவலகங்கள் போலவே பள்ளிகளுக்கும் நவம்பர் 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version