தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார்

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். காவல்துறையினர் அமைத்த 10 தனிப்படைகள் இடம் இருந்து தப்பித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் நோட்டீஸ் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் காவல்துறைக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு சத்துணவு பணிக்காக அறிவிக்கப்பட்டு பின்னர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை பெற்று உள்ள காவல்துறை இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் விரைவில் இது குறித்து வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version