இந்தியா

விவசாயிகள் பேரணி மீது மீண்டும் ஒரு கார் மோதல்: ஒருவர் காயம்

Published

on

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கீம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் விவசாயிகளின் போராட்டத்தின் கூட்டத்தின் இடையே புகுந்தது. இதனால் 4 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர். அது குறித்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததை கண்டித்தும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் இதில் பிரியங்கா காந்தி உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இது குறித்து தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது என்பதும் இந்த வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் விவசாயிகள் மீது ஒரு கார் மோதியதில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் அம்பாலா தொகுதி பாஜக எம்பியின் கார் திடீரென மோதியது இதில் விவசாயி ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

seithichurul

Trending

Exit mobile version