சினிமா செய்திகள்

பதிலடி கொடுத்த யுவன்: இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன்!

Published

on

சமீபத்தில் இணையதளத்தில் யுவன் சங்கர் ராஜாவை கேலிசெய்து நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை வைரலாக்கிய நிலையில் தற்போது அந்த மீம்ஸ்க்கு இன்ஸ்டாகிராமில் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கூட ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆனால் பல ஆண்டுகளாக இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு குறைவான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றும் மீம்ஸ் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலானது.

இதனை அடுத்து பொங்கி எழுந்த யுவன்சங்கர் ராஜாவின் ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஃபாலோயர்களை அதிகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் முயற்சியாக தற்போது யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதனை யுவனின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்தது போல் இருக்கும் இந்த கொண்டாடக் காரணமாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யுவன் சங்கர் ராஜாவின் ஹேஷ்டேக் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version