இந்தியா

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் தப்பியோட்டம்: அதிகாரிகள் அதிர்ச்சி!

Published

on

கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் ஒமிக்ரான் நெகட்டிவ் என்ற சான்றிதழை வாங்கி விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் விமான நிலையத்திற்கு வந்த 10 பயணிகளும் சோதனை செய்யாமல் திடீரென தப்பி ஓடி விட்டதாகவும் அந்த 10 பேரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை இன்று இரவுக்குள் பிடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தப்பி ஓடிவிட்டதை அடுத்து அவரால் மேலும் பலருக்கு ஒமிக்ரான் வைரஸ் வர வாய்ப்பு இருப்பதால் உடனடியாக அந்த நபரை பிடிக்க காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து மேலும் அந்த நபருக்கு நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த தனியார் சோதனை நிலையத்தை இடமும் விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version