தமிழ்நாடு

ரூ.1 லட்சம் கோடி முறைகேடாக செலவு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published

on

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி முறைகேடாக திட்டமிடாமல் செலவு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்த நிலையில் சற்று முன் அவர் கூறிய தகவல்களில் ஒன்று தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் திட்டமிடாமல் முறைகேடாக செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் லாபகரமாக இயங்க கடன் வாங்கலாம் என்றும் ஆனால் நஷ்டமாக இயங்குவதற்கு கடன் வாங்குவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும் நிர்வாக திறமையும் இல்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் சரியாக ஆட்சி நடத்தாததே தற்போதைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிடுவது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக அல்ல என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தின் அனைத்து தரவுகளையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது என்றும் பல்வேறு துறைகளில் முழுமையான தரவுகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்க வேண்டிய நிலையில் தான் தமிழக அரசு தற்போது உள்ளது என்றும் கடன் தொகையை முழுமையாக வளர்ச்சி திட்டத்தில் செலுத்தினால் தான் முழு வருமானம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வணிகவரித்துறை மூலம் தற்போது கிடைப்பதைவிட பல கோடி வருமானம் வர வேண்டுமென்றும் ஜிஎஸ்டி வந்த பிறகு பல வருவாய்கள் தமிழகத்திற்கு வரவில்லை என்றும் கூட்டாட்சிக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version