தமிழ்நாடு

குடும்பத்திற்கு ஒரு பதவி: வித்தியாசமான விளக்கம் கொடுத்த கே.எஸ்.அழகிரி

Published

on

சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சோனியாகாந்தி அல்லது ராகுல் காந்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது .

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்பதற்கு வித்தியாசமான விளக்கம் அளித்தார் .

கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவிக்கு என்றால் ப சிதம்பரம் அல்லது கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதவி பறிக்கப்படுமா என கேட்டபோது ப சிதம்பரமும் அவருடைய மனைவியும் ஒரு குடும்பம் என்றும் கார்த்தி சிதம்பரம் அவருடைய மனைவியும் ஒரு குடும்பம் என்றும் இருவரும் தனித்தனி குடும்பமாக இருப்பதால் இரு வருக்கும் பதவி கொடுத்தது தவறு இல்லை என்றும் கூறினார் .

திருமணமாகி விட்டால் அவர்கள் தனி குடும்பம் தானே என்றும் அதனால் இந்த விதி இதற்கு பொருந்தாது என்று வித்தியாசமான விளக்கத்தைக் கொடுத்தார். இந்த விளக்கத்தைக் கேட்டு கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் சிரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version