தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வேடிக்கை பார்த்த இளைஞர் மாடுமுட்டி உயிரிழப்பு!

Published

on

இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் காளைகளை காளையர்கள் அடக்கும் காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறி வந்த மாடு ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் மீது முட்டியடஹி அடுத்து, சம்பவ இடத்திலேயே அந்த பார்வையாளர் உயிரிழந்தார் என்றும், அவரது பெயர் பாலமுருகன் என்றும் அவருக்கு வயது 18 என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டதாகவும் ஆறு சுற்று முடிவில் மொத்தம் 573 காளைகள் அவிழ்த்து விடப்பட்டதாகவும் இதில் மொத்தம் 37 பேர் காயமடைந்ததாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தவர் முருகன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version