இந்தியா

காசு கொடுத்தால் கைதியாகலாம்: கர்நாடக அரசின் புதிய திட்டம்!

Published

on

கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று தெரியாமல் பலர் குற்றம் செய்கின்றனர் என்றும் குற்றவாளிகள் சிறையில் என்னென்ன கொடுமைகள் அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்தால் பலர் குற்றவாளிகளாக மாற மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக ஒருநாள் கைதி திட்டம் என்ற திட்டத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெலகாவியில் இருக்கும் ஹிண்டல்கா என்ற சிறை நிர்வாகம் ரூபாய் 500 செலுத்துவதன் மூலம் ஒரு நாள் முழுவதும் கைதியாக தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தில் ரூபாய் 500 கொடுத்து கைதியாக வருபவர்களுக்கு சிறையில் எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. கைதி எண், சீருடை, உணவு, வேலைகள் என அசல் கைதிகள் என்னென்ன செய்வார்களோ அவை அத்தனையும் ரூபாய் 500 கொடுத்து ஒரு நாள் கைதியாக வருவோருக்கும் வழங்கப்படும்.

ஒரு நாள் கைதியாக இருந்து விட்டு வெளியே செல்பவர்கள் அடுத்து மீண்டும் இந்த சிறைச்சாலைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தை உண்டாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version