தமிழ்நாடு

ஒரு கோடி சப்ஸ்க்ரைபர், ரூ.10 லட்சம் நன்கொடை: வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையவசதி உச்சகட்ட வளர்ச்சியில் யூடியூப் சேனலில் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த பலரும் தற்போது பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை கவர்ந்த முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர்களாகி வில்லேஜ் குக்கிங் என்ற சேனலுக்கு கிடைத்துள்ளது.

வருடத்தில் ஆறு மாதம் விவசாயம் செய்து, மீதமுள்ள ஆறு மாதங்களில் கிடைக்கும் வேலையை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் சோதனை முறையில் முதல் முறையாக 2018ஆம் ஆண்டில் யூடியூப் சேனலை தொடங்கினர். அதில் சமையல் செய்யும் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் இந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பெரிய தம்பி என்னும் பெரியவரே இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

சமையல் வீடியோக்கள் குறித்து யூடியூபில் ஆயிரக்கணக்கான சேனல்கள் இருந்தாலும் கிராமத்து இளைஞர்களின் இந்த கள்ளங்கபடம் இல்லாத பேச்சு, மண் மணம் மாறாத பாரம்பரிய சமையல் முறை திறந்தவெளியில் பிரம்மாண்டமான சமையல் ஆகியவற்றால் உலக அளவில் ஒரு கோடி ரசிகர்களை இந்த சேனல் பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி இந்த குழுவினரை நேரில் சென்று சந்தித்தார் என்பதும் அது குறித்த வீடியோக்களும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சேனல் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி சப்ஸ்கிரைர்களை கடந்து முதல் தமிழ் சேனல் என்ற பெருமையை இந்த சேனல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக யூடியூப் இவர்களுக்கு டைமண்ட் பட்டன் வழங்கியுள்ளது. எனக்கு 75 வயது ஆகிறது என்றும், இந்த வயதில் தனக்கு யூடியூப் சேனலில் டைமண்ட் பட்டன் கிடைத்தது பெருமைக்குரியதாக இருப்பதாகவும் இந்த சேனலின் நிர்வாகி பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் ரூபாய் 10 லட்ச ரூபாயை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதியாக இந்த சேனலில் நிர்வாகிகள் 6 பேர் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version