சினிமா செய்திகள்

ஒரே நாளில் ஒரு கோடி.. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் டிரைலர்!

Published

on

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டு, இதுவரை 1 கோடியே 10 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வரும் பொங்கலுக்கு பேட்ட வெர்சஸ் விஸ்வாசம் மோதல் உறுதியாகியுள்ளது. ஜனவரி 10ம் தேதிக்கு இரு படங்களும் மோதவுள்ளன. ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதுவது சமீப காலத்தில் இதுவே முதல் முறையாகும்.

பேட்ட படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மட்டுமே பெரிய நட்சத்திரங்கள்.

ஒத்தைக்கு ஒத்த வாடா எனும் விஸ்வாசம் வசனத்தையும்.. அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன் என பேட்ட பட வசனத்தையும் ரசிகர்கள் மோதலுக்கு தகுந்த வாறு மீம்களாக எடிட் செய்து சண்டை போட்டு வருகின்றனர். ஜனவரி 10 வியாழக்கிழமை வருகிறது. ஜனவரி 17 வரை பொங்கல் விடுமுறை தொடர்ந்து வார விடுமுறை என்பதால், ஜனவரி 10 முதல் 20 வரை தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், இரு படங்களும் நல்லாயிருக்கும் பட்சத்தில் நல்ல லாபத்தை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

seithichurul

Trending

Exit mobile version