தமிழ்நாடு

ரூ.1 கோடி கொடுத்தால் ஜாமின்: ராமேஸ்வரம் மீனவர் வழக்கில் இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Published

on

ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமின் வழங்க முடியும் என இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வருகின்றனர் என்பதும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறைக்காவல் நீட்டிக்கப்படுவதாகவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களை ஜாமினில் விடுதலை செய்ய ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version