தமிழ்நாடு

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள், இரவுநேர ஊரடங்கு: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published

on

தமிழகத்தில் பள்ளிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என ஒரு சிலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தமிழக அரசும் அதை பரிசீலனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பில் இது குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தமிழ்நாட்டில் கொரனோ பாதிப்பு அதிகரித்து உள்ளதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version