தமிழ்நாடு

ஊரடங்கின்போது ஆம்னி பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் இயங்குமா?

Published

on

ஊரடங்கின்போது இரவில் இயங்க வேண்டிய ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டதன் காரணமாக ஆம்னி பேருந்துகள் நாளை முதல் பகலில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் இயங்கவேண்டிய வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் பகலில் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் விமானங்களும் வழக்கம் போல் இயங்க உள்ளன. ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு மட்டும் இரவு நேரத்தில் ஆட்டோ மற்றும் கார்கள் செல்ல அனுமதி உண்டு என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version