இந்தியா

இந்தியாவில் நுழைந்த ஓமிக்ரான் வைரஸ் – கர்நாடகாவில் 2 பேர் பாதிப்பு

Published

on

கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. எனவே, அந்நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் யாரும் வர பல நாடுகள் தடை விதித்துள்ளது.

அதேபோல், பல நாடுகளுக்கும் செல்பர்கள் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் விமான நிலையங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் உறுதி செய்துள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்ளுவது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து கண்காணிக்கப்படுவார்கள், கொரோனா தடுப்பு நடைமுறை இதில் பின்பற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை; ஆனால், விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒமிக்ரானை கண்டறிய 37 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version