இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான்: மீண்டும் ஒரு அலையா?

Published

on

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 3 ஒமிக்ரான் நோயாளிகள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்பட ஒருசில மாநிலங்களில் நேற்று ஒமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக மீண்டும் இந்தியாவில் ஒமிக்ரான் அலைவருமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பெரும் பொருளாதார சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அலைவருமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஒமிக்ரான் குறித்து நிபுணர்கள் கூறிய போது இரண்டு மாதங்கள் கழித்துதான் புதிய ஒமிக்ரான் அலையை ஏற்படுமா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்பது குறித்து தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு டெல்லியில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்படுமா? என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Trending

Exit mobile version