இந்தியா

தெலுங்கானாவிலும் புகுந்தது ஒமிக்ரான்: சோமாலியாவில் இருந்து வந்தவர்களுக்கு பாதிப்பா?

Published

on

இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேர்களுக்கு ஒமிக்ரான் பரவியதை அடுத்து மொத்தம் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்து வரும் நிலையிலும் தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் சோமாலியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version