இந்தியா

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: மொத்த பாதிப்பு எவ்வளவு?

Published

on

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் நேற்று முதல் கேரளாவிலும் பரவி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே 40 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் நேற்று மேலும் நான்கு பேருக்கும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிநாட்டில் வந்த இருவருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்தியாவில் 4 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை மற்றும் அனைத்து மாநிலங்களின் சுகாதார துறையும் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version