செய்திகள்

தமிழகத்திலும் நுழைந்த ஓமிக்ரான் வைரஸ் – ஒருவருக்கு தொற்று உறுதி…

Published

on

ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக கொரோனா என்கிற ஒற்றைச்சொல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சுமார் 21 கோடி பேருக்கும் மேல் இதில் பாதிக்கப்பட்டனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ‘ஓமிக்ரான்’ என்கிற வைரஸ் பயமுறுத்த துவங்கியுள்ளது.

இந்த வைரஸ் முதன் முதலில் வட ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்டது. பின்னர் மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இந்த தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தமிழகத்திலும் நுழைந்துள்ளது. நைஜீரியாவில் இந்து  தோஹா வழியாக சென்னை வந்த 47 வயது பயணி ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் பயணம் செய்த அவரின் உறவினர் 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் நுழைந்துள்ளது மக்களிடம் பீதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version